நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும்-வானிலை ஆய்வு மையம்.!

நிவர் புயலானது இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது . இந்த நிலையில் தற்போது புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த நிவர் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .அப்போது மணிக்கு 145கி.மீ வேகத்தில் காற்று வீச கூடும் என்றும், தமிழக, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கும் ,உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .