ஒரு விஞ்ஞானியாக நான் உங்களிடம் மன்றாடுகிறேன்… கோவிஷீல்ட் டோஸ் இடைவெளி சர்ச்சையை சற்று நிறுத்துங்கள்!

சர்ச்சையை கிழப்புபவர்களிடம் கைகூப்பி வேண்டுகிறேன் – நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால்.

இந்தியாவில் கொரோனா தொற்று தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், அதில் கொரோனா தடுப்பூசி வழங்குவது முக்கிய நடவடிக்கையாக மாநில அரசுகள் கையாண்டு வருகின்றனர். மேலும் நாட்டில் பல்வேறு தடுப்பூசிகள் பரிந்துறைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கோவிசீல்ட் கொரோனா தடுப்பூசியை வைத்து நிறைய சர்ச்சைகள் சமீப காலமாக நிகழ்ந்து வருகிறது. இதனை நிறுத்த வி.கே.பால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கோவிஷீல்டின் இரண்டு டோஸ்களுக்கிடையேயான இடைவெளியை 12 முதல் 16 வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான முடிவு, எந்தவொரு அழுத்தமும் இல்லாமல்,அறிவியல் ரீதியாக எடுத்த சுயாதீனமான முடிவாகும், மேலும் உங்களை கையெடுத்து கும்பிட்டு  வேண்டுகிறேன் “ஒரு விஞ்ஞானியாக, ஒரு நிபுணராக, நான் கெஞ்சுகிறேன்”. கோவிசீல்ட் 2 டோஸ்களுக்கான இடைவெளி குறித்த சர்ச்சையை நிறுத்துங்கள், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்படவில்லை

என்டிஏஜிஐ (NTAGI) என்ற இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி குழுவின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு என தெறிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் குழப்பத்தை உருவாக்கி, தடுப்பூசிகளின் கடுமையான பற்றாக்குறையை மூடிமறைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியதால், இந்த மாதிரியான விமர்சனத்திற்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.