110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்த நிசர்கா..!

110 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடந்த நிசர்கா..!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடந்ததாகவும், கடக்கும்போது 100-110 கி.மி. வேகத்தில் காற்று வீசியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை கடக்க தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த நிசர்கா புயலானது, தற்பொழுது அலிபாக் அருகே மணிக்கு 100-110 கி.மி. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிதீவிர புயலான நிசர்கா, தற்பொழுது புயலாக வலுவிழந்தது. மேலும், 23 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. மேலும், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

Join our channel google news Youtube