பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஜாமீன்!! இன்று வெளிவர வாய்ப்பு

  • மாணவியை தவறாக வழிநடத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி.
  • பேராசிரியை நிர்மலாதேவி  இன்று  வெளிவர வாய்ப்பு உள்ளது. 

மாணவியை தவறாக வழிநடத்துவதாக கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார் பேராசிரியை நிர்மலாதேவி.பதினொரு மாத விசாரணைக்கு பின்னர் ஜாமினில் வெளிவர உள்ளார்.

மதுரை அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் மாணவிகளை தவறாக வழி நடத்தியதன் காரணமாக அந்த கல்லூரியில் வேலை செய்த பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த விஷயம் பெரிய ஆனால் சிபிசிஐடி இந்த வழக்கை ஏற்று விசாரணை நடத்தி வந்தது . மேலும் இந்த வழக்கில் அதே கல்லூரியில் பணிபுரியும் முருகன் என்றால் மற்றொரு பேராசிரியருக்கும் ஆராய்ச்சி மாணவர் கருப்பன் என்பவருக்கும் தொடர்புள்ளதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்திருந்தார்

இந்நிலையில் நிர்மலா தேவி தனக்கு ஜாமீன் வழங்குமாறு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விண்ணப்பித்திருந்தார் . மேலும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்க எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் பதினோரு மாதங்கள் கழித்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. பிணை தொகையாக 10000 செலுத்திய நிர்மலா தேவியின் அண்ணன் மாயாண்டி மூத்த சகோதரர் ரவி ஆகியோர் நிர்மலாதேவிக்கு ஜாமீன் அளிப்பதாகவும் தெரிவித்தனர் இதனால் இன்று  நிர்மலாதேவி சிறையில் இருந்து ஜாமினில் வெளி வருவார் என்று தெரிகிறது.

Leave a Comment