சிக்கித்தவிக்கும் வாடிக்கையாளர்கள்..! விரைவில் கட்டுப்பாடு தளர்த்தப்படும்- நிர்மலா சீதாராமன்..!

தனியார் வங்கியான  யெஸ் வங்கி தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

இதை  நிர்வகிக்க எஸ்பிஐ முன்னாள் தலைமை நிதி அதிகாரி பிரசாந்த் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் மட்டும் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்தே யெஸ் வங்கியை ரிசர்வ் வங்கி கண்காணித்து வந்தது. கடந்த ஆண்டு யெஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி அபராதம் விதித்தது. 

யெஸ் வங்கிக் கணக்கில் மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் என்ற கட்டுப்பாடு விரைவில் தளர்த்தப்படும்.யெஸ் வங்கியை மறு சீரமைக்கும் பணி இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என கூறினார்.

author avatar
murugan