“நான் விடுதலை ஆகிவிட்டேன்” நீதிமன்றத்தில் தியானம் செய்த நிர்மலா தேவி!

அருப்புக்கோட்டை தேவாங்கூர் கல்லூரி பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. கடந்த வருடம் கல்லூரியில் படிக்கும் மாணவிகளை பாலியல் தொழில் ஆசை கூறி தவறான பாதைக்கு வழிநடத்த முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா மதுரை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கிடைக்காமல் 11 மாதம் சிறையில் இருந்து வந்த நிர்மலா, கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளி வந்தார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று நீதி மன்றம் வந்தார் நிர்மலா தேவி. கடந்த முறை சுடிதாரில் வந்திருந்த நிர்மலா, இந்த முறை சேலையில் வந்துள்ளார். வழக்கு விசாரணை முடிந்து அடுத்த 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நீதி மன்ற வாயிலில் வெகு நேரம் நின்ற நிர்மலா திடீரென உக்கார்ந்து முனுமுனுக்க ஆரம்பித்தார். அப்போது, நான் குற்றவாளி இல்லை விடுதலை ஆகிவிட்டேன் என்றும், தன்னை குற்றம் சாட்டிய மாணவிகள் இறந்துவிட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னை அழைத்து செல்ல தம் கணவர் மற்றும் உறவினர்கள் வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.