Breaking :நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனு தள்ளுபடி.!

  • குற்றவாளிகள் 4 பேருக்கும் வருகின்ற 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.
  • வழக்கில் சாட்சியின் உண்மை தன்மையை ஆராயக் கோரி குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மறுஆய்வு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இதனையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜனவரி  22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று டெல்லி உயர்நீதிமன்றம்  நீதிமன்றம் அறிவித்தது.

குற்றவாளிகள் வினய்குமார் சர்மா, முகேஷ் சிங் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு  மனு  தாக்கல் செய்தனர்.ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மறுசீராய்வு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை  முகேஷ் சிங் அனுப்பினார்.

ஆனால் முகேஷ் சிங்கின் கருணை மனுவை டெல்லி ஆளுநர் அனில் பைஜால் நிராகரித்தார். மேலும் கருணை மனுவை  உள்துறை அமைச்சகமும் நிராகரித்தது.இந்நிலையில் நிர்பயா கொலை வழக்கில் சாட்சியின் உண்மை தன்மையை ஆராயக் கோரி குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த மறுஆய்வு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

author avatar
murugan