சிறையில் இருக்கும் அக்கா நந்தினிக்காக போராட துவங்கும் தங்கை நிரஞ்சனா!

மதுவுக்கு எதிராக போராடி வரும் போராளி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில், அவர்களை விடுவிக்கக்கோரி நந்தினியின் தங்கை இன்று போராடாட்டத்தை துவங்குகிறார்.

மதுரை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வரும் நிரஞ்சனா ஆனந்தன் அவர்கள் நாளை காலை  சட்டக்கல்லூரி வாயில் முன் போராட்டத்தை துவங்க உள்ளார். நந்தினி அவரது தந்தை இருவருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்காமல் இழுத்து அடுத்துவரும் நிலையில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

நந்தினிக்கு கடந்த 5ம் தேதி குணா என்பவருடன் திருமணம் நடக்க இருந்த  நிலையில், ஜாமின் கிடைக்காததால் திருமணம் நடைபெறவில்லை. இந்த வழக்கு விசாரனை மீண்டும் வரும் 9 ம் தேதி சிவகங்கை நீதிமன்றத்தில் வருகிறது.