ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு.. 9 பேர் பலி!

அமெரிக்கா, சிகாகோவில் ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் கூடியிருந்த மக்கள்

By surya | Published: May 26, 2020 12:46 PM

அமெரிக்கா, சிகாகோவில் ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் கூடியிருந்த மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருட மே மாதத்தின் இறுதி திங்கள்கிழமை ராணுவத்தில் பணிபுரிந்து, உயிரிழந்த வீரர்களை நினைவுகூரும் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. மேலும் அந்த தினத்தன்று, அந்நாட்டில் விடுமுறை அளிக்கப்படும்.

இந்த தினத்தன்று சிகாகோ நகர் மக்கள் ராணுவ அருகாட்சியகம், நூலகத்திற்கு செல்வார்கள். மேலும் சிலர், பீச், ஏறிக்கு சென்று விடுமுறையை கழிப்பார்கள். இந்நிலையில், சிகாகோ நகரில் ராணுவ வீரர்களின் நினைவு தினத்தில் கூடியிருந்த மக்கள் மீது திடீரென மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அங்கிருந்த பொதுமக்கள் 9 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். இதேபோல, கடந்த ஆண்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் காயமடைந்த நிலையில், 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc