நினைவு திறனை அதிகரிக்க ஆப்பிள் சாப்பிடுங்க….!!!

நம்மில் அநேகருக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கும். இதற்காக பலர் பல மருந்துகள் மற்றும் கீரைகள், பழங்கள் என சாப்பிடுவதுண்டு. ஆனால் ஒரு ஆராய்ச்சியில் ஆப்பிளுக்கு நினைவாற்றலை அதிகரிக்க கூடிய சக்தி உண்டு என கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிள் சாறுக்கும், மூளையின் ஆரோக்கியத்திற்கு தொடர்பு உண்டு என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான மூளைக்கு அதிகமான நார்ச்சத்துக்கள் தேவைப்படும். நாம் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடும் போது மூளைக்கு தேவையான அனைத்து சத்துக்களும்நமக்கு கிடைப்பதோடு, நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. ஆப்பிள் சாப்பிடுவதாலும், ஆப்பிள் சாறு அருந்துவதாலும் மூளை மன அழுத்த பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.