இரவு ஊரடங்கை “கொரோனா ஊரடங்கு” என்று மறுபெயரிடுங்கள்;கொரோனாவுக்கான சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்-மோடி

இந்தியாவில் கொரனோ வைரஸ் இன் இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா, பஞ்சாப்,தமிழகம், மற்றும் கர்நாடகா உட்பட சில மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

அவசர ஆலோசனைக் கூட்டம்:

இதனையடுத்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் பரவி வரும் இரண்டாவது அலையை  கட்டுப்படுத்த மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்து முதல் அமைச்சர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சவாலான நிலைமை:

முதலமைச்சர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி,”மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது.கோவிட்-19 நிலைமையைச் சமாளிக்க உங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“நம்மிடம் அதற்கான வழிமுறைகள் உள்ளது , இப்போது அனுபவம் உள்ளது; சோதனை, தடமறிதல், சிகிச்சை, கோவிட்-பொருத்தமான அனுகுமுறை ஆகியவை தொற்றுநோயைக் குறைக்க உதவும்” என்று பிரதமர் மோடி முதலமைச்சர்களிடம் கூறினார்.

இரவு ஊரடங்கு:

நாம் மைக்ரோ-கன்டெய்ன்மென்ட் மண்டலங்களில் கவனம் செலுத்த வேண்டும். இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள இடங்களில், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வைத் தொடர, ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இரவு 9 அல்லது 10 மணி முதல் காலை 5 மணி அல்லது காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு நேரத்தைத் தொடங்குவது நல்லது ”என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் கூறுகையில் , “கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் தற்பொழுது உள்ள தொற்று முதல் உச்ச அலைகளைத் தாண்டிவிட்டன. இது ஒரு தீவிரமான கவலை. மக்கள் சாதரணமாக உள்ளனர்.பெரும்பாலான மாநில அரசுகள்  கவலையின்றி சாதாரணமாக உள்ளனர் என்றார்.

சோதனைகளை அதிகப்படுத்துங்கள்:

கொரோனாவுக்கான சோதனைகளை அதிகப்படுத்துமாறு  உங்கள் அனைவரையும் வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 70% RT-PCR சோதனைகளைச் செய்ய வேண்டும் என்பதே நம் இலக்கு. நேர்மறையான நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகமாக வரட்டும், ஆனால் அதிகபட்ச சோதனை செய்யுங்கள். சரியான மாதிரி சேகரிப்பு மிக முக்கியமானது, சரியான நிர்வாகத்தின் மூலம் அதை சரிபார்க்க முடியும்.

Dinasuvadu desk

Recent Posts

சும்மா கிளப்பாதீங்க…திரும்ப வருகிறேன்! இசையமைப்பாளர் யுவன் விளக்கம்!

Yuvan Shankar Raja: தன்னுடைய இன்ஸ்டா கணக்கு DEACTIVATE ஆன நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர்…

35 mins ago

அவரால் மட்டும் தான் அது முடியும்! ரிஷப் பண்ட் குறித்து ரோஹித் சர்மா!

Rohit Sharma : இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை பற்றி பாராட்டி பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது…

49 mins ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… சுனாமி எச்சரிக்கை..!

Indonesia: இந்தோனேசியாவில் 3 நாட்களில் 5 முறை எரிமலை வெடித்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் உள்ள ருவாங் என்ற எரிமலை கடந்த 3…

50 mins ago

மதுரை சித்திரை திருவிழா உருவான வரலாறு தெரியுமா?

மதுரை சித்திரை திருவிழா  -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம். மீனாட்சி அம்மன் வரலாறு : மீனாட்சி அம்மன்…

55 mins ago

சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல..ரோஹித் தான்.! வில்லியம்சன் அதிரடி கருத்து.!

ஐபிஎல் 2024 : சூர்யாவும் இல்ல..பட்லரும் இல்ல, ரோஹித் ஷர்மா தான் டி20 இரட்டை அடிப்பார் என கேன் வில்லியம்சன் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள்…

60 mins ago

இஸ்ரேல் ராணுவ ஒப்பந்த சர்ச்சை.! 28 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய கூகுள்.!

Google : இஸ்ரேல் ராணுவம் உடனான ஒப்பந்ததிற்கு எதிராக போராடிய ஊழியர்களை கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இஸ்ரேல் ராணுவம், காசா நகரில் ஹமாஸ் அமைப்பினர் மீதான…

1 hour ago