இலங்கையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

இலங்கையில் வருகிற 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு 11 மணி முதல் இரவு நேர பயண தடை அமலுக்கு வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், ஆசிய நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இலங்கையில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 246 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஊரடங்குகள் கடைபிடிக்கப்பட்டு வரும்  நிலையில், இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடமையாக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கையில் வருகிற 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்பட்டுள்ள நிலையில், இரவு நேரப் பயணத் தடையும் இன்றிரவு முதல் அமலுக்கு வருகிறது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணம் செய்வதற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறைகளை மீற கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal