அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு..!

அசாம் மாநிலம் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பெருமளவு பாதித்துள்ளது. அதனால் மாநிலங்களில் பாதிப்புக்கு ஏற்றவாறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அசாம் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவித்துள்ளது.

மேலும், மாநிலத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ள கொரோனா பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் 24 மணி நேர அவசர சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், தொழில்கூடங்கள், அலுவலகங்கள் ஆகியவை இரவு 8 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.