30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

அடுத்த அதிரடி..! ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு!

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தகவல்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயரதிகாரிகளை மாற்றம் செய்தும் மற்றும் புதிய அதிகாரிகளை நியமித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இடமாற்றம் செய்யப்பட்டாலும், அமைச்சரவையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதில், குறிப்பாக திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று தான் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரிடம் அந்த பதவியை பறித்து, அப்பதவிக்கு புதிய அமைச்சராக டிஆர் பாலு மகன் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

இதன்பின், தமிழக அமைச்சரவரையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அடுத்த அதிரடி நடவடிக்கையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதலமைச்சரின் தனிச்செயலாளர், நிதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சென்னை மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே, ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.