#Accident:மெக்ஸிகோ, நகர திருவிழாவில் வெடி விபத்து 39 பேர் காயம்
மெக்ஸிகோ வில் அவ்வப்போது நகர திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களில் பிரம்மாண்டமாக பட்டாசு வெடிப்பது மெக்ஸிகோ நாட்டிலும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது.
மெக்ஸிகோ வின் சாண்டியாகோ டிங்குய்ஸ்டென்க்கோ நகரில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது. விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் 39 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலை மிகவும் மோசமாகவும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.