ஈக்வடாரில் நிலச்சரிவு… 6 பேர் பலி! 30 பேர் மாயம்!

Ecuador Landslide

ஈக்வடார் : ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில்  6 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காணாமல் போயுள்ளனர் என்று ஈக்வடார் அதிகாரிகளின் முதற்கட்ட தகவலை தெரிவித்துள்ளார்.  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது.

எனவே, இந்த பலத்த மழை காரணமாக நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக பல நாடுகள் எச்சரிக்கவும் செய்து இருந்தார்கள். இதனையடுத்து, எல் சால்வடாரில், நாடு முழுவதும் கனமழை காரணமாக நாட்டின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் சிவப்பு எச்சரிக்கையை அறிவித்தது.

ஈக்வடாரில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காணாமல் போன சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உடல்களை மீட்க தொடங்கினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஈக்வடாரின் பொதுப்பணித்துறை அமைச்சர் ராபர்டோ பெரிய அளவிலான” நிலச்சரிவு நாட்டின் மையத்தில், பானோஸ் டி அகுவா சான்டா நகரில் ஏற்பட்டது.  பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் என்னுடைய இரங்கலையும், ஆதரவையும் தெரிவித்து கொள்கிறேன்” என செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்