வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மன்னார் வளைகுடா முதல் குமரி வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்னிலங்கையை ஒட்டி நிலவுகிறது. இது 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடலை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த பகுதியாக உருமாறும் என்றும், அதற்குப் பிந்தைய 24 மணி நேத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளா கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளுக்கு வரும் இரண்டு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
2025 : உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது…
சென்னை : நள்ளிரவில் வான வேடிக்கைகள், துள்ளலான இசை, நடனம் என ஆரம்பித்து, கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு பூஜைகள் என…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…