வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…

Default Image

வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், மன்னார் வளைகுடா முதல் குமரி வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்னிலங்கையை ஒட்டி நிலவுகிறது. இது 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடலை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த  பகுதியாக உருமாறும் என்றும், அதற்குப் பிந்தைய 24 மணி நேத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு கேரளா கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளுக்கு வரும் இரண்டு நாட்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்