செல்பியால் வந்த வினை., அந்த யானை என்ன செய்தது தெரியுமா? அமைச்சர் விளக்கம்!

திருச்செந்தூர் கோயில் யானையிடம் செல்பி எடுக்க முயன்ற காரணத்தாலேயே யானை தாக்கியது என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

Minister Sekarbabu

சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும் பாகனின் உறவினர் சிசுபாலன் ஆகிய இருவரையும் தாக்கியது. இதில் இருவரும் படுகாயமுற்று உயிரிழந்தனர்.

சாதுவாக கோயிலை சுற்றிவரும் யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி இருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதில் யானை பாகனின் உறவினர் சிசுபாலன் தான் யானையிடம் செல்பி எடுக்க முயன்றார். அதனால் தான் யானை அவரை தாக்கியது. எனவும் அப்போது யானை பாகன் உதயகுமார் அவரை காப்பாற்ற முயலும் போது யானை உதயகுமாரையும் தாக்கியது.

இச்சம்பவம் பற்றி தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “திருச்செந்த்தூர் கோயில் யானையிடம் யானை பாகனின் உறவினர் செல்பி எடுக்க முயன்றுள்ளார்.  யானை அனுமதியின்றி விரும்பத்தகாத இச்செயலை தொடர்ந்ததால், யானை அவரை தாக்கியுள்ளது. அப்போது பாகனையும் தாக்கியுள்ளது. சற்று நேரத்தில் யானை இயல்பு நிலைக்கு திரும்பி தனது பாகனை தட்டி எழுப்பியுள்ளது. எ

சில நாட்களில் யானையை குளிக்க கூட்டிசென்றுள்ளனர். அப்போது யானை இயல்பு நிலையிலேயே இருந்துள்ளது.  தமிழ்நாட்டில் மொத்தம் 27 கோயில்களில் 28 கோயில் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 28 யானைகளுக்கும் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 நாட்களுக்கு ஒருமுறை கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்தில் ஒருவருக்கு திருச்செந்தூர் கோயிலில் தகுதிக்கேற்ற வேலை வழங்க தமிழக முதல்வர் கூறியுள்ளார். ” என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
bjp bihar
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad