#Breaking-தூத்துக்குடி பயணம்- முதல்வர் வருகை ரத்து???

Default Image

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தூத்துக்குடி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள், உறவினர்கள், அதிகாரிகளும் நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த தவுசாயம்மாளுக்கு முதல்வர் பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்கிற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இன்று காலை 9 மணியளவில் சிலும்பாளையத்தில் தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.இந்நிலையில் முதல்வரின் தூத்துக்குடி பயணமானது ரத்து செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதே போல நாளை கன்னியாகுமரி, விருதுநகரில் முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவிருந்த ஆய்வுகளும் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்