எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை.! தமிழக அரசு அனுமதி.!

எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி 2017 முதல் 2021 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த போது மத்திய மாநில அரசுகள் இணைந்து 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மருத்துவ கல்லூரிகள் புதியதாக கட்டப்பட்டன.
11 மருத்துவக்கல்லூரிகள் :
தமிழகம் முழுவதும் மொத்தமாக 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த விவகாரத்தில் விதிமுறைகளின் படி டெண்டர் விடப்படவில்லை எனகூறி லஞ்சஒழிப்பு துறை விசாரணை செய்து வருகிறது.
இபிஎஸ் மீது விசாரணை :
இந்த விசாரணையில், அப்போது முதல்வர் பதவியிலும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை முடிவு செய்தது.
தமிழக அரசு அனுமதி :
உயர் அரசாங்க பத்வியில் ஒருவர் இருந்தால் அவரை விசாரிக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். தற்போது, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இபிஎஸ் மீது வழக்குப்பதிவு.?
இந்த அனுமதியை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியிடம் முதற்கட்ட விசாரணை துவங்கப்படும். அதில் அதரங்கள் கிடைத்தால் மட்டுமே அவர் மீது லஞ்சஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024