தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது…!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது. காவிரி ஆணையத் தலைவர் திட்டவட்டமாகக் கூறிய பிறகும் போராட்டம் எதற்கு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.