சுட சுட சாப்பாடு.. விவசாயிகளுக்கு விருந்து வைத்து ‘நன்றி’ தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்!
தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய 300 விவசாய குடும்பங்களுக்கு த,வெ.க தலைவர் விஜய் விருந்து வைக்கிறார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வி.சாலை பகுதியில் சுமார் 170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விவசாய நிலங்களும் அடங்கும். அதனை மாநாட்டிற்கு பயன்படுத்திவிட்டு மீண்டும் விவசாய பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல ஏற்பாடு செய்து கொடுப்ப்பதாகவும் த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து , அண்மையில், நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயிக்கு பசுமாடு, கன்றுகுட்டியை தவெக நிர்வாகிகள் வழங்கி இருந்தனர். அதனைத்தொடர்ந்து, தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய் விஜய் இன்று விருந்து வழங்குகிறார் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, விஜய் தன்னுடைய கையால் விருந்து வழங்குவதால் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு குடும்பத்தோடு பலரும் வருகை தந்தனர். வருகை வந்தவர்களை வாசலுக்கே வந்து வரவேற்று கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அழைத்துச்சென்றார். அவர்களும் மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட ரெடி ஆகினார்கள்.
இவர்களுக்காக, சைவ உணவும் சமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விஜய் தன்னுடைய வீட்டிலிருந்து பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு காரில் புறப்பட்டு பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவர் வருகை தந்ததை பார்த்த அவருடைய ஆதரளவர்கள் விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு தன்னுடைய கையால் வந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறி த.வெ.க தலைவர் விஜய் விருந்து வைத்து தனது நன்றியை தெரிவித்தார்.
விருந்துக்கு வருகை தந்த பலரும் த.வெ.க. மாநாட்டுக்கு எங்கயுமே இடம் கொடுக்கல.. நல்லபடியா நடக்கணும்னு நினைத்து நாங்கள் இடம் கொடுத்தோம். மாநாடும் பிரமாண்டமாக நடந்தது.. இப்ப விஜய் எங்களை கூப்ட்டு மரியாதை செய்யுறது சந்தோஷமா இருக்கு.” என மனம் நெகிழ்ச்சி பேசினார்கள்.