ஸ்டெர்லைட் வழக்கு:இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:

டிசம்பர் 15 ஆம் தேதி  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும்.தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

Image result for ஸ்டெர்லைட்

இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
பின்னர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை  நிர்வாகம் மனுதாக்கல் செய்தது.ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கபட்டுள்ள சீலை அகற்றக்கோரி மனுதாக்கல் செய்தது.அந்த மனு விசாரணைக்கு வந்தது.ஸ்டெர்லைட் தரப்பில்  மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

அதேபோல்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ஜுனன் மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.கே.எஸ்.அர்ஜுனன் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் சுப்பு முத்துராமலிங்கம் ஆஜரானார்கள்.அதில், இந்த ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இந்த ஆலையை திறக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது.அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக  தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை இன்று (மார்ச் 27-ம் தேதி) ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.இதனால் வழக்கின் விசாரணை இன்று (மார்ச் 27-ம் தேதி) நடைபெறுகிறது.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

10 hours ago