Saidai Duraisamy [file image]
சைதை துரைசாமி ரத்த மாதிரிகள் இமாச்சலப் பிரதேச ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி கடந்த 4-ம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் காணாமல் போனார்.வெற்றி துரைசாமி உட்பட 3 பேர் பயணம் செய்த அந்த கார் சட்லஜ் நதியில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
வெற்றி துரைசாமியுடன் சென்ற கார் ஓட்டுனர் பலியான நிலையில் அவரது நண்பர் படுகாயத்துடன் உயிர்தப்பினார். காணாமல் போன வெற்றி துரைசாமி கண்டுபிடிக்கும் பணி 8-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. வெற்றி துரைசாமி உடைமை செல்போன் காரில் கிடைத்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் இருந்த பாறைகளின் இடுக்குகளில் இருந்து மூளை பாகங்கள், மூளை திசுக்கள், ரத்த கறைகள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன.
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்ப்பு..!
சேகரிக்கப்பட்ட திசுக்கள் வெற்றி துரைசாமி உடையது தான் என கண்டறிய பெற்றோர்களின் ரத்த மாதிரி சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ரத்த மாதிரிகளை போலீஸிடம் ஒப்படைத்துள்ள நிலையில் அதை தற்போது இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒப்பிட்டு பார்த்தால் அது வெற்றி துரைசாமி மூளை திசுவா என்பது தெரியவரும்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…