பாஜக ஆட்சியில்லாத மாநிலங்கள் இந்த பிரச்சனைகள் நடைபெறுகிறது.! சபாநாயகர் அப்பாவு வேதனை.!
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இது போல நடந்துகொண்டால் மத்திய அரசு உயர்பதவி கொடுக்கும் என ஆளுனர் ரவி செய்கிறாராரா என தெரியவில்லை. – சபாநாயகர் அப்பாவு வேதனை.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறுகிறார். ஆளுநர் உரைக்கு பிறகு , அலுவல் குழு ஆய்வில் முடிவெடுக்கப்பட்டது. அதன் படி நாளை மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா உட்பட மறைந்த தலைவர்களுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நடைபெற உள்ளது. அதன் பிறகு 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற்று, 13ஆம் தேதி முதல்வர் பதில் உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் நிறைவு பெரும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதியே ஆளுனரிடம் கொடுத்துள்ளளோம். அதனை 7ஆம் தேதி ஆளுனர் மாளிகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை இன்று 9ஆம் தேதி ஆளுனர் வாசித்தார்.
தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரைதான் சட்டப்பேரவை நிகழ்வில் பதிவு செய்யப்படும் என ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆளுநர் ரவி தேசிய கீதம் இசைக்கப்படும் வரை இருப்பது தான் மரபு. இந்திய அரசியலமைப்பு சட்டம் 175,176இன் படி, மாநில சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற அனுமதி வழங்கப்படுகிறது. இந்திய அரசியல் சட்டம் தான் இந்த உரிமையை கொடுக்கிறது . அந்த சட்டத்தை கொண்டு வந்த அம்பேத்கர் பெயரையே ஆளுனர் உச்சரிக்கவில்லை. திராவிட மாடல் எனும் சொல்லையும் அவர் குறிப்பிடவில்லை.
அரசியல் சட்டம் 159படி பதவி பிரமாணம் எடுத்தவர். மதசார்பற்ற நாடு என்பதை மதம் சார்ந்த நாடு என கூறுகிறார். தமிழ்நாட்டை தமிழகம் என குறிப்பிடுகிறார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் இதுபோல தான் நடக்கிறது. ஒருவேளை பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இது போல நடந்துகொண்டால் மத்திய அரசு உயர்பதவி கொடுக்கும் என இப்படி செய்கிறார்களா என தெரியவில்லை.
இது போல் தான் மேற்கு வாங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு குடியரசு துணை தலைவர் பதவி கிடைத்துள்ளது. அதுபோல எதுவும் பதவி கிடைக்கும் என இவ்வாறு செய்கிறாரா என தெரியவில்லை என தனது விமர்சனத்தையும் வேதனையும் குறிப்பிட்டார் சபாநாயகர் அப்பாவு.