நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி குறித்து அதிகாரபூர்வமாக இன்று நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்த தகவல் அனைத்தும் சமீபகாலமாக வெளியாகிய வண்ணம் கடந்த வாரம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அதிரடியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் , கட்சியை எப்போது தொடங்குவது , கட்சி பெயர், கொடி போன்றவை குறித்து இதில் முக்கிய முடிவு எடுப்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து களம் காணலாமா என்பது பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி விவாதித்ததாக தகவல்கள் வெளியானது.
இந்த கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினி தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றமே ஏற்பட்டதாக கூறிவிட்டு சென்றார். இந்நிலையில், மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன், இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இதன் பின் நடிகர் ரஜினி சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலைசரியாக 10.30 மணிக்கு அவர் செய்தியாளர்களை சந்திக்கிரார். தன் வீட்டிற்கு வெளியேயும், விமான நிலையத்தில் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொட்ங்குவேன் என்ற அறிவிப்புக்கு பின்னர் ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பது இதுவே முதல்முறை.ஆகையால் இந்தச் சந்திப்பில் அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என அரசியல் நோக்கர்கள் என்று தமிழக அரசியல் களமே உற்றுநோக்குகிறது.மேலும் அரசியலில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…