சொன்ன நேரத்தில் சொன்னபடி ரஜினி அறிவிப்பார் – தமிழருவி மணியன்
திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று ரஜினியை சந்தித்தபின் அர்ஜூன் மூர்த்தி, தமிழருவி மணியின் தகவல்.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான அறிவிப்பு வரும் 31-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார். புதிதாக ஆரம்பிக்கவுள்ள கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சி மேற்பார்வைளராக அர்ஜூன் மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோரை நியமிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சி பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்த நிலையில், மறுபக்கம் நடிகர் ரஜினி அண்ணாத்த படப்பிடிப்புக்கு சென்றிருந்தார்.
அண்ணாத்த படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. இதனைத்தொடர்ந்து, ரத்தம் அழுத்தம் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நலம் தேறி நேற்று தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இருப்பினும், ரஜினிகாந்த் ஒரு வாரத்திற்கு ஓய்வு எடுக்க வேண்டும்.
மேலும், இரத்த அழுத்தத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்றும் உடல் உழைப்பை குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இந்த நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் அர்ஜூன் மூர்த்தி, தமிழருவி மணியின் இன்று சந்தித்துள்ளனர். பின்னர் பேசிய அவர்கள், திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறினார். நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை டிவிட்டர் வாயிலாக வெளியிடுவார் என தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.