சென்னை மக்களே., இன்று மாலை முதல் அதிகனமழை! வெளியான புதிய தகவல்!
இன்று மாலை அல்லது இரவு முதல் சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் கனமழை பெய்ய ஆரம்பிக்கும் என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று இன்னும் சில மணி நேரங்களில் ஃபெங்கால் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் புயல் கரையும் கடக்கும் வரையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் இடைப்பட்ட வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை பற்றிய தகவல்களை தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” இன்று மாலை அல்லது இரவில் இருந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மாறும் புதுச்சேரி பகுதியில் கனமழை தொடரும் ” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புயல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் முதல் புதுச்சேரி வரையிலான பகுதியில் அதிகனமழையைக் கொடுக்கப் போகிறது. நாளை (சனிக்கிழமை) மிகுந்த மழை குறித்த முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
நேற்று இரவு ஒரு சிறிய மேகம் 50-60 மிமீ மழையை கொடுத்தது. இந்த புயல் கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்த புயல் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ” என பதிவிட்டுள்ளார்.
Rains to start soon in KTCC (Chennai) -Pondy belt as we go into evening / night rains will pickup more intensity. Note it is not raining anywhere else.
This cyclone is going to give very very heavy rains to KTCC (Chennai) to Pondy belts. Extreme caution and watch need to be… pic.twitter.com/iYX9DnSFnd
— Tamil Nadu Weatherman (@praddy06) November 29, 2024