#Breaking: சாட்சியம் அளித்த பெண் காவலரின் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

Default Image

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்கவும், ஊதியத்துடன் விடுப்பு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட நிலையில், சாட்சியம் அளித்த பெண் காவலர் உரிய பாதுகாப்பு இல்லை என புகார் எழுந்தது.

இதன் காரணமாக, அந்த பெண் காவலரின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்