தமிழகத்தில் தற்போது கொரோனா காரணமாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்ட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சமீபத்தில், சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தேவையின்றி காரில் வந்த பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் மகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அபராதம் விதித்ததற்காக போலீஸாருடன் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் வாக்குவாத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இதைதொடர்ந்து, சென்னை சேத்துப்பட்டு பகுதியில் போக்குவரத்து போலீசாரை மிரட்டிய புகாரில் பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரின் மகள் முன் ஜாமீன் கோரி இருந்தனர். இந்த மனுவை விசாரித்தபோது நான் பேசியதை எடிட் செய்து சாதகமான வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளது என பெண் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததால் முன்ஜாமீன் தரக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில், சென்னை காவல்துறை சார்பில் பார் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் பயிற்சி வழக்கறிஞர் ப்ரீத்தி ஆகிய இருவரின் விவரங்களையும் தெரிவித்து இது போன்ற செயல்களில் வழக்கறிஞர்கள் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது.
எனவே வழக்கறிஞர் தனுஜா மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…