கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் பல வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டை 1000 படுக்கைகளை கொண்டதாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகுமார் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் ஒன்று ஜிப்மர் மருத்துவமனை. அங்கு கொரோனா நோயாளிகளுக்காக 250 படுக்கைகள் கொண்ட ஒரு வார்டு மட்டும் உள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் இந்த மருத்துவமனையில் விழுப்புரம் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவால் போதுமான அளவு சிகிச்சை அளிக்க மருத்துமனையால் முடியவில்லை என்று திணறி வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகளை 1000 ஆக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும் இந்த மருத்துவமனை கொரோனா பரிசோதனை நிலையமாகவும் செயல்பட்டு வருகிறது. அதனையும் ஒரு நாளில் 1000 பேருக்கு பரிசோதனை செய்யும் விதமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…