6 மாதங்களில் அதிமுக கூடாரம் காலியாகும் என்று எம்பி கதிர் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தக்கோறி திமுக தனது தோழமைக் கட்சிகளுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இப்போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தாமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும் செப்., 30ந்தேதி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது அவசர, அவசரமாக வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது கண்டித்தக்கது. இந்த சட்ட மசோதாக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதனை எதிர்க்கும் என்று தெரிவித்தார்.மேலும் தமிழக அரசியலில் தற்போது அழுத்தம் மற்றும் குழப்பம் நிலவி வந்த அதிமுகவில் உள்ள பிரச்சணையானது இன்றைய செயற்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமாக வெளியவந்தது
இந்நிலையில் சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆன பிறகு அதிமுகவில் ஏற்படும் மாற்றம் குறித்த கேள்விக்கு மற்றவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அதிமுக கூடாரம் அடுத்த 6 மாதங்களில் காலியாகும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்” என்று அந்த பேட்டியில் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…