#இரண்டாகிறதா?இரட்டைஇலை- ஆறே மாதத்தில் அதிமுக காலி-கதிர் ஆனந்த் பகீர்

Default Image

6 மாதங்களில் அதிமுக கூடாரம் காலியாகும் என்று எம்பி கதிர் ஆனந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தக்கோறி திமுக தனது தோழமைக் கட்சிகளுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இப்போராட்டம் திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் கதிர் ஆனந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

அண்மையில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்ட மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தாமல், எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையிலும் செப்., 30ந்தேதி வரை நாடாளுமன்றம் நடைபெறும் என்று அறிவித்துவிட்டு இப்போது அவசர, அவசரமாக வேளாண் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது கண்டித்தக்கது. இந்த சட்ட மசோதாக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதனை எதிர்க்கும் என்று தெரிவித்தார்.மேலும் தமிழக அரசியலில் தற்போது அழுத்தம் மற்றும் குழப்பம் நிலவி வந்த அதிமுகவில் உள்ள பிரச்சணையானது இன்றைய செயற்குழு கூட்டத்தில் வெட்ட வெளிச்சமாக வெளியவந்தது

இந்நிலையில்  சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆன பிறகு அதிமுகவில் ஏற்படும் மாற்றம் குறித்த கேள்விக்கு மற்றவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் அதிமுக கூடாரம் அடுத்த 6 மாதங்களில் காலியாகும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார்” என்று அந்த பேட்டியில் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்