கஞ்சா டோர் டெலிவரி.! ஆட்டம் காட்டிய அதிமுக பிரமுகர்.! மடக்கி பிடித்த காவல்துறை.!

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா டோர் டெலிவரி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகமாகி கொண்டே போவதால், நாளைய இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனை தடுக்க பல்வேரு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
இதனால், ஆபரேஷன் கஞ்சா எனும் அதிரடி நடவடிக்கை மூலம் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அவ்வப்போது கிலோ கணக்கில் கஞ்சா பல்வேறு நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் கஞ்சாவை டோர் டெலிவரி செய்து வந்த அதிமுக பிரமுகரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு அம்மா பேரவை செயலாளர் ரமேஷ் என்பவர் தான் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தனது இருசக்கர வாகனம் மூலம் டோர் டெலிவெரி செய்து வந்த ரமேஷை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர். மேலும், இவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024