இஸ்ரேல்-ஹமாஸ் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது – தமிழ்நாடு அரசு!!

isrel war tamilnadu

கடந்த 7ம் தேதி முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே நடைபெறும் உச்சக்கட்ட போரில், கடந்த மூன்றே நாட்களில் இரு தரப்பிலிருந்தும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600-ஐ தாண்டியுள்ளது.

தற்போது, இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டது வருகிறது என தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்தோருக்கு பின்வரும் நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அயலகத் தமிழர் நலத்துறையால் உடனடியாக உதவி எண்கள் வெளியிடப்பட்டு, அங்கு பாதிக்கப்பட்டுள்ளோர் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தமிழ்நாடு அரசை, தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல்களும்  வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், அங்குள்ள தமிழர்களிடம் தற்போது தொடர்பு கொண்டு, சுமார் 84 நபர்களின் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. இவர்கள் அங்கு மேற்படிப்புக்காகவும், திட்டப் பணிகளுக்காகவும் சென்றவர்கள். இதில் சில சுற்றுலா செந்தர்வர்களும் அடங்குவர்.

இந்த கவல்கள் உடனடியாக ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்திடமும் பகிரப்பட்டு, அவர்களை உடனடியாக மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து ஏற்பாடுகளை செய்து தரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அங்குள்ள தமிழர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன், அங்குள்ள சூழ்நிலை மற்றும் ஒன்றிய அரசின் ஆலோசனையின் அடிப்படையில் அவர்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொன்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
vijay tvk
Wayanad By polls
congress win karnataka 2024
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray