IPL 2018:ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல…!வேல்முருகன் எச்சரிக்கை ….!
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரித்துள்ளார்.
இதனால் பாதுகாப்பு பணியில் எம்சி சாரங்கன், இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் நான்கு குழுக்கழும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மைதானத்தின் உள்ளேயும் மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல் அதிகாரிகளைக் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தவிர போக்குவரத்து வாகனங்கள் நெரிசலின்றி சீராக செல்ல, ரசிகர்கள் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தலைமையில் போக்குவரத்து காவல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மேலும், சேப்பாக்கம் பெல்ஸ் சாலை வாலாஜாசாலை விக்டோரியா ஹாஸ்டல் ஆகியவை இன்று மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும், சாலை மூடப்பட்டபின் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியை காணவரும் ரசிகர்கள் பலத்த சோதனைகளுக்குப் பிறகே மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியின் போது, மைதானத்திற்குள் பாம்புகள் வந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.