HBDThanthaiPeriyar : சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்தவர் தந்தை பெரியார்! கமல்ஹாசன் வாழ்த்து!
பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவருடைய உருவப்படத்திற்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தியும், ஒரு சிலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களின் மூலமும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட சிலர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், மக்கள் நிதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது x வலைதள பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன் அதில் கூறியிருப்பதாவது ” பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர். சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களை நினைவுகூர்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
பிறப்பினால் மனிதர்களில் பேதம் கற்பிப்பது பேரிழிவு என்பதை இறுதிவரை பிரச்சாரம் செய்துவந்தவர் என் பேராசான் பெரியார். கதரை அணிந்தது, கள்ளை எதிர்த்தது, பெண்ணுயர்வு போற்றியது என சகல பரப்புகளிலும் சமர் புரிந்தவர்.
சமத்துவத்தை சுவாசமாகக் கொண்டு வாழ்ந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளில்…— Kamal Haasan (@ikamalhaasan) September 17, 2023