இனிமேல் தான் இருக்கு ஆட்டம்… தமிழகத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட்.!
தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. இன்று மதியம் கரையை கடக்கவிருந் தபுயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை தாமதமாகலாம் என சுயாதீன வானிலை ஆய்வாளகள் பிரதீப் ஜான்மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கணித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே, ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
ரெட் அலர்ட்
இன்று (30-ம் தேதி)
அதன்படி, இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (1-ம் தேதி)
மேலும், நாளை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரிரு இடங்களில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் எங்கே கடக்கும்
மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே புயலாக கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.