அம்மா அரசின் தொழிற் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றி, தொழில் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்குக என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமல்,தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை செம்மையாகப் பயன்படுத்தி தமிழ் நாட்டை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தமிழக அரசு தொடர்ந்து செயலாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
விஷன் 2023:
மாண்புமிகு அம்மாவின் ஆட்சிக் காலத்தில் “விஷன் 2023” என்ற தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொழில் வளர்ச்சிக்காக போடப்பட்டன.
முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2015-ல் மாண்புமிகு அம்மா அவர்களும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2019-ல் மாண்புமிகு அம்மாவின் அரசும் நடத்தி பல்லாயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதனால், பல்லாயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.
உலக முதலீட்டாளர் மாநாடு:
இவற்றில் கடந்த 5 ஆண்டுகளில், 72 சதவிகித திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், 73,711 கோடி ரூபாய் முதலீடுகளும், 1.86 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தான், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் “எர்த்தர் எனர்ஜி நிறுவனமும்”, போச்சம்பள்ளியில் “ஓலா நிறுவனமும்”, மின்சார இரு சக்கர வாகன உற்பத்திகளை துவங்கியுள்ளன.
10,000 பேருக்கு வேலை வாய்ப்பு:
இதன் மூலம், படிப்படியாக 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு உறுதியாகியுள்ளது. இந்திய மோட்டார் வாகன சந்தை மட்டுமல்லாமல், ஐரோப்பா, ஆசிய நாடுகளின் சந்தை தேவைகளையும் பூர்த்தி செய்வோம் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அம்மாவின் அரசு ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் பல்வேறு தொழில் வளர்ச்சிக்கான துரித நடவடிக்கைகள் காரணமாகவே ஓலா நிறுவனம் இந்தத் தொழிலை தமிழகத்தில் துவங்கியுள்ளது.
திமுக அரசு ஏற்படுத்தும் மாயை:
இந்நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள தி.மு.க அரசின் தொழில் துறை அமைச்சர் அவர்கள், ஏதோ இவர்கள் இந்த இரு சக்கர வாகன தொழிற்சாலையை திமுக அரசுதான் ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் கொண்டு வந்தது போன்ற மாயையை ஏற்படுத்த முயல்கிறார்.
சென்னையில் பேட்டியளித்த அவர், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், காற்று மாசுபடுவதைக் குறைக்கவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஓலா நிறுவனம்:
இதற்காக, மின்சார வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்ய, கிருஷ்ணகிரியில் ஓலா நிறுவனம் 500 ஏக்கர் நிலப் பரப்பில் மிகப் பெரிய மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகன உற்பத்தி மையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்க உள்ளது என்று கூறியுள்ளார்.
அம்மாவின் அரசு எடுத்த முயற்சியால் ஓலா நிறுவனம் ஏற்கனவே பணிகளைத் துவங்கி, தற்போது முடிவடையும் நிலையில் உள்ள ஒரு திட்டத்தை, ஏதோ இந்த ஒன்றரை மாத காலத்தில் கொண்டு வந்தது போல் அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் சொல்வது வியப்பாக உள்ளது.
அம்மாவின் அரசால் கொண்டு வந்த திட்டங்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்த 50 நாட்களுக்குள் கொண்டுவந்தது போல் பேசுவது ஏற்புடையதல்ல.
முதன்மை மாநிலம்:
இந்தப் போக்கை கைவிட்டு, அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை காழ்ப்புணர்ச்சி கொண்டு முடக்காமலும், மக்கள் நலனுக்காக புதிய திட்டங்களைக் கொண்டுவந்து, தொழில் துறையில் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடித்தளத்தை செம்மையாகப் பயன்படுத்தி தமிழ் நாட்டை தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க தொடர்ந்து செயலாற்றுங்கள் என்று இந்த ஆட்சியாளர்களை கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…