பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
3 வது நாளாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கடந்த சிலநாட்களாவே இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது, மேலும் அப்பர் பவானியில் 308 மில்லிமீட்டர், அவலாஞ்சியில் 120 மில்லி மீட்டர், குந்தாவில் 55 மில்லி மீட்டர், எமரால்டு 112 மில்லிமீட்டர், கெத்தையில் 5 மில்லி மீட்டர், சின்னக்கொரையில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்த நிலையில் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பதால் இதனால் பில்லூர் அணையில் இருந்து திறக்கப்படுகிறது. மேலும் இதனால் 3 வது நாளாக பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.