கொரோனா வார்டில் பணிபுரிந்த மருத்துவர்.. மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சோகம்!

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 24 வயதான மருத்துவர் கண்ணன், 3 ஆம் மாடியில் இருந்து குதித்து உயிரிழப்பு.
சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து வந்தவர், முதுகளை மருத்துவ மாணவர் கண்ணன். 24 வயதாகும் இவர், நள்ளிரவு 1.30 மணிவரை கொரோனா வார்டில் தனது பணிகளை முடித்துவிட்டு 3-ம் மாடியில் உள்ள தனது அறைக்கு ஓய்வெடுக்க சென்றார்.
அந்தநாள் காலையில், அவரின் உடலில் காயங்களுடன் மருத்துவமனை வளாகத்தில் மீட்கப்பட்டநிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மாடியில் இருந்து குதித்து கீழே விழுந்ததாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் தற்கொலை கொண்டாரா என விசாரித்து வருகின்றனர். மேலும், அவரின் செல்போனில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024