திமுக சட்டமன்ற உறுப்பினர் கன்னியாகுமரி ஆஸ்டின் சட்டசபையில், 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழகத்தில் மதுபான கடைகள் மூடப்படும் என்று மக்களிடம் சொல்லிதான் தமிழக்கத்தில் ஆட்சிக்கு வந்தீர்கள். ஆனால் 4 ஆண்டு முடிந்து விட்டது. இன்னும் ஒரு ஆண்டில் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு விடுமா? என கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்றுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. 5 ஆண்டுகளில் அனைத்து கடைகளும் மூடப்படும் என்று எங்கேயும் நாங்கள் சொல்லவில்லை. திடீரென அனைத்து மதுபான கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் உள்ளே வந்துவிடும். எனறார். அப்போது குறுக்கிட்ட தமிழக முதல்வர் பழனிச்சாமி அவர்கள், தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றபோது படிப்படியாக தான் எல்லாமே செய்ய முடியும். குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அரசு கவனமாக இருந்து அதை பின்பற்றி படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்றார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…