அதிமுக விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,டிடிவி தினகரன்.!இருவருமே உறுதியாக வருவார்கள்…!அடித்து கூறும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Published by
Venu

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன் வருவார்கள் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அவரது 100 வது பிறந்த நாள் முதல் கொண்டாடி வருகிறது தமிழக அரசு.இதனை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்தது.

Image result for ttv dinakaran mk stalin

எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் அதிமுக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் தமிழக அரசு எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவை அரசு விழாவாகவும் கொண்டாடி வருகிறது.

இதேபோல் சென்னையில் வருகின்ற 30-ந்தேதி நிறைவு பெற இருக்கிறது. இந்த நிறைவு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். ஆதரவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளும்படி பிரமாண்ட ஏற்பாட்டை செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கி நடத்துகிறார்.மேலும் அதிமுகவை சார்ந்த அனைத்து அமைச்சர்களும்,பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதற்கான அழைப்பிதழ்களில் வாழ்த்துரை வழங்குவோர் பட்டியலில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றது.

வாழ்த்துரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளரும் ,ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.இதனால் அதிமுகவிற்கு முக்கிய எதிரிகளாக கருதப்படும் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் பெயர்களும் இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,அமமுக துணைப்பொதுச்செயலாளரும் ,ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் வருவார்கள் என நம்புகிறோம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

4 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

5 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

5 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

6 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

6 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

6 hours ago