மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் பகுதியில் துறைகாட்டும் வள்ளலார் கோயில் உள்ளது.
1200ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கோயில் 1959ம் ஆண்டு 25வது தருமை ஆதீனத்தால் குடமுழுக்கு செய்யப்பட்ட பின்னர் தற்போது தான் மாசிலாமணி சுவாமிகள் தலைமையில் அடுத்த மாதம் 4ம்தேதி 27வது சந்நிதானம் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கோயிலின் வடபகுதியில் மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டுவதற்காக 10அடி குழி தோண்டிய போது மிகவும் பழமையான மெல்லிய செங்கற்களால் 4 அடிக்கு 4 அடியிலான சுவர் ஒன்றும், அதனை உடைத்த போது சுரங்கம் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அந்த சுரங்கத்தின் உள்ளே 10அடி தூரத்தில் அங்கே ஒரு சுவர் தெரியவந்தது.
தஞ்சையை ஆண்ட சோழர்களின் இளம் வாரிசுகளுக்கு போர் பயிற்சி உட்பட அனைத்து பயிற்சிகளும் கோயில் வளாகத்தில் வைத்து மிகவும் ரகசியமாக நடத்திய பின்னர், அவர்களுக்கு முடிசூட்டி அவர்களை அரண்மனைக்கு அழைத்து செல்வார்கள். அதுபோன்று தான் இந்த கோவிலிலும் அரசு வாரிசுகள் தங்கியிருக்கலாம்.
மேலும், சுமார் 10அடி தூரமுடைய இந்த சுரங்கப் பாதை ஆபத்து என்று வரும்போது தப்பித்து செல்வதற்காக கட்டப்பட்டிருக்கும் என்றும் ஓய்வுபெற்ற தொல்லியல்துறை ஆய்வாளர் முத்துச்சாமி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…