பெஞ்சல் புயல்: சென்னையில் திரையரங்கு & நகைக்கடைகள் மூடல்.!
கனமழை காரணமாக சென்னையில் திரையரங்குகள் இயங்காது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் புயலின் தீவிரம் இப்போதே தெரியத் தொடங்கியிருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றினால் மரங்கள் அங்கும் இங்கும் ஆடுகின்றன. புயல் கரையைக் கடக்கும் வரை இப்படியான தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவக்கியுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக பேசின் ப்ரிட்ஜ் பகுதியில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. திருவொற்றியூர், மீனம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயலில் 10 செ.மீ மற்றும் தண்டையார்பேட்டையில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக இன்று மழை பெய்யும் மாவட்டங்களில் திரையரங்குகள் இயங்காது என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்படபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் நகைக்கடைகள் இன்று இயங்காது என்றும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள் அத்தியாவசிய தேவையன்றி வேறு எதற்கும் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.