நெருங்கும் ஃபெஞ்சல் புயல்! “இதெல்லாம் பண்ணாதீங்க”..மக்களுக்கு அரசு அட்வைஸ்!
மழை பெய்து வரும் இந்த நேரத்தில் மின் இணைப்பு தொடர்பான பொருட்களை எவ்வாறு கையாள வேண்டுமென அரசாங்கம் அட்வைஸ் கொடுத்துளளது.
சென்னை : புயலின் பாதிப்புகளை தவிர்க்க சில முன் எச்சரிக்கை வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. எனவே, இந்த புயல் கரையை கடந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அதனை பின்பற்றி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சார்ஜ் : புயல் கரையை கடைக்கும் போது கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் நிச்சயமாக மின்தடை ஏற்படும். எனவே, அவசர தகவலுக்காக உங்களுடைய செல்போன்களை சார்ஜ் செய்யவும். அத்துடன், வானொலி கருவியுடன் கூடுதல் பேட்டரிகளை வைத்துக் கொள்ளவும்.
வானிலை அலர்ட் : எப்போதுமே அவரை தேவைக்காக வெளியே செல்கிறீர்கள் என்றால் நிச்சியமாக வானிலை தொடர்பான செய்திகளை படித்துவிட்டு செல்லுங்கள். வெளியே செல்லவேண்டாம் என அறிவிப்பு வந்தால் அதனை கேட்டுக்கொண்டு வீட்டிற்குள் இருங்கள்.
ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள் : கனமழை பெய்வதால் சில வீடுகளில் தண்ணீரை தேங்கும் அப்படி இல்லை என்றாலும் கூட உங்களுடைய வீட்டிற்குள் நீங்கள் வைத்திருக்கும் ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை எந்த இடத்தில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமோ அங்கு வைத்து கொள்ளுங்கள். பொருட்களை மட்டும் பாதுகாப்பான இடங்களில் வைக்காமல் நீங்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கவும்.
அவசர கால பொருட்கள் : மழை நேரம் என்பதால் மருந்து மாத்திரை இயல்பாக கேட்டவுடன் கிடைப்பது சிரமம் எனவே, அதனை முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அவசர கால பொருட்கள் மற்றும் முதலுதவிப் பெட்டிகளை தயாராக கைக்குள்ளே வைத்திருக்கவும்.
கால்நடைகள்/ செல்லப்பிராணிகளை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும்.புயல் அல்லது வெள்ள எச்சரிக்கை தெரிவிக்கப்பட்ட உடனே உயரமான இடத்திற்கோ அல்லது அரசு முகாமிற்கோ செல்லவும்.குறைந்தபட்சம் ஒரு வார உணவு மற்றும் தண்ணீரை சேமிக்கவும். புயல் காலத்தை எதிர்கொள்ள அரசு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.