மதுரையில் உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் எல்லிஸ் நகர் எனும் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் மருத்துவராகப் பணியாற்றும் மருத்துவரின் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நிலை மோசமடைந்து வருவதை அறிந்த அவர், தான் இறந்து விட்டால் தன்னை கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யுமாறு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க, அவரது ஆசைப்படி அவரது மகளாகிய பெண் மருத்துவருடன் இணைந்து இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக இளைஞர்கள் சிலர் சேர்ந்து அவரது தந்தையை அவரது ஆசைப்படி கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் அருகிலேயே செல்ல அஞ்சும் இந்த காலத்தில் இறந்தவரின் உடலை பெண் மருத்துவரின் உதவியுடன் இறுதி ஆசை நிறைவேற அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்களின் செயல் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…