#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது!

Published by
Surya

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 78,573 ஆக அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 13 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,032  ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 59 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 7 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.42 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,277 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 165 பெரும், திருவள்ளூரில் 129 பெரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 44 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 755 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Published by
Surya

Recent Posts

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

6 hours ago

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!

கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…

7 hours ago

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு : ஒரே நாடு தேர்தல் மசோதா முதல்… அமித்ஷா சர்ச்சை பேச்சு வரை…

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…

8 hours ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து.. 11 பேர் உடல் கருகி பலியான சோகம்! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு.!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில்  உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…

9 hours ago

பொங்கலை நோக்கி ‘விடாமுயற்சி’… அஜித்துடன் நடிகை ரம்யா! புதிய புகைப்படம் வெளியீடு.!

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்  விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…

9 hours ago

‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ கொலை குற்றவாளியை காட்டிக்கொடுத்த கூகுள் மேப்!

ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…

9 hours ago