முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி திமுகவின் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,திமுகவின் புகார் மீது முதற்கட்ட விசாரணை எப்போது முடியும்? என லஞ்சஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விட்டது. முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு ஜூன் 22-ம் தேதி முதலே திமுகவின் புகார் குறித்து ஆரம்பக்கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்சஒழிப்புத்துறை தெரிவித்தது.
இதனால் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தப் பணிகளை தனது உறவினர்கள், பினாமிக்கு வழங்கியதாக முதல்வர் பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தினசரி விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை.ஆனால் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கூடுதல் மனுதாக்கல் செய்யப்பட்டது.அதில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று திமுக சார்பில் தொடரப்பட்ட சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் 1 வாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் 3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும்.ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையேல் ஆளுநர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…